நமீபியா, தென்னாபிரிக்கா, சிம்பாப்வே ஆகிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு T20 கிரிக்கெட் தொடரானது இடம்பெற்று வருகிறது.
குறித்த தொடரில் நமீபியாவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான பிரிட்டோரியஸ் 53 பந்துகளில் சதம்(101) அடித்து சாதனை படைத்துள்ளார்.
இதுவரை T20 கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையுடன் முதல் இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா சசாயினை இரண்டாம் இடத்திற்குப் பின் தள்ளி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்.
குறித்த பட்டியலில், இந்தியாவின் யஸஸ்வி ஜெய்ஸ்வால் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.