2026ஆம் ஆண்டின் மகளிர் அணிகளுக்கிடையிலான ஆசியக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியானது நாளைய தினம் துபாயில் நடைபெறவுள்ளது.
குறித்த தொடரில்; முதலாவது அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியை வீழ்த்தியதன் மூலம் தொடர்ந்து 10ஆவது முறையாக இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதுடன், பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தியதன் மூலம் இலங்கை மகளிர் அணி 7ஆவது முறையாக ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
8ஆவது தடவையாகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் நோக்கிலுள்ள இந்திய மகளிர் அணியை வெற்றிகொண்டு, நடப்புச் செம்பியனான இலங்கை மகளிர் அணி இரண்டாவது முறையாக ஆசியக் கிண்ணத்தை இலங்கைக்குக் கொண்டு வருமா என்று எதிர்பார்ப்பில் இரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
நாளை இடம்பெறவிருக்கும் இறுதிப் போட்டியோடு சேர்த்து, மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் இலங்கை மகளிர் அணிகள் 6ஆவது முறையாக நேருக்கு நேர் மோதவிருக்கின்றன.