உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான உணவு வகைகளைத் தினமும் எடுத்துக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
அவ்வாறான உணவுகளில் மிகச் சிறந்தவை பழங்களாகும். எனவே, சில பழங்களையும் அவை தரும் சத்துகளையும் பற்றிப் பார்க்கலாம்...
● ஒரேஞ்ச் — Vitamin C அதிகம் நிறைந்துள்ளது.
● கிவி — Vitamin C மற்றும் அன்டி ஒக்ஸிடன்ட்கள் உள்ளன.
● ஸ்ட்ரோபெர்ரி — Vitamin C மற்றும் அன்டி ஒக்ஸிடன்ட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.
● மாம்பழம் — Vitamin A மற்றும் C என்பன அதிகமாக உள்ளன.
● கொய்யாப்பழம் — Vitamin C மிக அதிகமாக உள்ள பழங்களில் ஒன்றாகும்.
● அன்னாசிப்பழம் — Vitamin C மற்றும் பிற ஊட்டச்சத்துகள் உள்ளன.
எனவே, பழங்களோடு சேர்த்து காய்கறிகள், போதுமான புரதம், நல்ல தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கலாம்.