58 Views
அன்றாடம் உடலுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தில் 25% ஒரு Cup தேங்காய்ப்பாலில் கிடைக்கிறது. தேங்காய்ப்பாலில் அதிகளவு மக்னீசியம் காணப்படுவதால் தசை வலிக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
தேங்காய்ப்பாலில் உள்ள பொஸ்பரஸ் சத்து நமக்கு எலும்பு நோய் ஏற்படாமல் தடுக்கிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி நல்ல பொலிவை வழங்குகின்றது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் தேங்காய்ப்பால் அதிகரிக்கிறது. தினமும் வெறும் வயிற்றில் தேங்காய்ப்பால் குடிப்பதால் வயிற்றுப்புண் குணமடைகிறது.
தேங்காய்ப்பாலில், பட்டைப் பொடி, நாட்டுச் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்துக் குடிக்கலாம் அல்லது பாலிற்கு பதில் தேங்காய்ப் பாலில் தேநீர் செய்து குடிக்கலாம்.