அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டிற்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதோடு சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் நேற்று நேரில் பார்வையிட்டார்.
அதேநேரம் நேற்று இரவு 9 மணியளவில் லண்டனில் நடிகர் அஜித் குமாரின் அணி பங்கேற்கும் மிச்செலின் லீ மான்ஸ் கார் பந்தய போட்டியை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அங்கு முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அஜித்தை விஜய் ஓடிச் சென்று ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார்.
லே மான்ஸ் போட்டியில் சர்வதேச பந்தய வீரராகக் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பாக 16-ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தயக் காரை இயக்கினார்.
இப்போட்டியில் அஜித் குமாருடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக் இணை காரோட்டியாக பங்கேற்றார்.
சுமார் 2 மணி நேரம் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தல , தளபதியின் சந்திப்பு இருதரப்பு இரசிகர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.