60 Views
பெண்களுக்கான ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தொடரில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், இந்திய அணி அரையிறுதியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மற்றொரு அரையிறுதியில் இலங்கை அணி பாகிஸ்தானை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆசியக் கிண்ண வரலாற்றில் இந்திய பெண்கள் அணி இதுவரை 7 முறை பட்டம் வென்றுள்ளது. இன்றைய இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய அணி 8வது முறையாக ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றும்.
மறுபுறம், நடப்பு சம்பியனான இலங்கை அணி, கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் களமிறங்குகிறது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.