காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளோ, பானங்களோ அல்லது மூலிகைப் பதார்த்தங்கள் எதுவாயினும், அவை அன்றைய நாளைத் தீர்மானிப்பது மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு முக்கிய காரணியாக அமைகின்றன.
இவற்றில் முக்கியமாக காலையில் வெறும் வயிற்றில் நாங்கள் பருகும் பானங்கள் மிகச்சிறந்த மருத்துவக் குணங்களோடு இருக்குமாயின் உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
அவ்வாறு வெறும் வயிற்றில் அருந்தக்கூடிய பானங்களும் அவை தரக்கூடிய பலன்களைப் பற்றியும் பார்க்கலாம்...
●வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து பருகுவதால் உடலில் உள்ள நச்சுகள் நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்
● சமிபாட்டுப் பிரச்சினைகளைச் சரி செய்யவும், வயிற்றில் உள்ள அதிக உப்பைக் குறைக்கவும் சீரகத் தண்ணீர் உதவியாக இருக்கும்.
● வெந்தயம் ஊற வைத்த நீரைப் பருகுவதால் இரத்த சர்க்கரையின் அளவு சமநிலையோடு இருப்பதுடன், அதிகளவில் உள்ள உடல் எடை குறையும்.
● அவ்வப்போது கிரீன் டீ பருகுவது வளர்ச்சி மாற்றத்தை அதிகரிப்பதுடன், உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்
● ஊற வைத்த பாதாம் நீரைப் பருகுவதால் மூளைக்கு ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் என்பன கிடைக்கும்.