நடிகர் அஜித்குமார் நடிப்பதை தாண்டி மேலும் பல விடயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
கார் ரேஸ், துப்பாக்கிச் சுடுதல், ட்ரோன்கள் என பல விடயங்களில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது,இரசிகர்கள் பலருக்கும் தெரியாத ஒரு விடயத்தை நடிகர் கருணாகரன் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சூது கவ்வும் படத்தில் பணப்பையை தூக்கிக்கொண்டு, ஒரு RC ஹெலிகாப்டர் செல்வது போல காட்சி இருக்கும்.
அதை எடுத்து கொடுத்ததே அஜித் தான் என நடிகர் கருணாகரன் கூறியுள்ளார்.
வெறும் 30 ஆயிரம் தான் பட்ஜெட் இருந்தது, ஆனாலும் அஜித் சார் உதவி செய்து எங்களுக்கு எடுத்து கொடுத்தார். அதை இயக்கியதே அஜித் சார் தான் என அவர் கூறியுள்ளார்.