45 Views
முதலில் கருப்பு உளுந்தை நன்றாகச் சுத்தம் செய்து, பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும். அவை ஆறியதும் அதை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் சீனியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து உருக்கி வடிகட்டிக் கொள்ளவும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் உளுந்துப் பொடி, சீனிப் பாகு, ஏலக்காய்த்தூள், வறுத்த எள் மற்றும் அரைத்த முந்திரி, பாதாம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவை சற்று சூடாக இருக்கும் போதே தேவையான அளவு நெய் சேர்த்து, கையில் பிடிக்கும் பதத்திற்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி லட்டுகளாகத்
பிடித்தல் சுவையான சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து லட்டு தயார்.