சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரோகித் சர்மா,டெஸ்ட் போட்டிகளின் போது தனக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நள்ளிரவு உணவுப் பழக்கம் குறித்து மனம் திறந்து பேசினார்.
டெஸ்ட் கிரிக்கெட் தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வடிவம் என்றும், அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போது மிக அதிக அளவிலான பதற்றத்தை தான் உணர்வதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் ரோகித் சர்மா சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.