29 Views
பலாப்பழம் சுவையான பழம் மட்டுமல்ல பல்வேறு ஊட்டச்சத்துகளையும் கொண்டது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமானத்தைச் சீராக்கவும், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரவும் உதவுகிறது.
பலாப்பழத்தில் உள்ள Vitamin c நோய் எதிர்ப்பு சக்திக்கு துணைபுரிகிறது. மேலும், பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுவதுடன், இதய நலத்திற்கும் பயனளிக்கிறது.
அத்தோடு கரோட்டினாய்டுகள், பிளாவனாய்டுகள் போன்ற antioxidants, பொட்டாசியம், மெக்னீசியம், கல்சியம், இரும்புச்சத்து போன்ற தாதுக்களும் பலாப்பழத்தில் உள்ளன. இருப்பினும், இயற்கை சர்க்கரை இருப்பதால் அளவோடு சாப்பிடுவது சிறந்தது.