Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
அமெரிக்காவில் இரட்டைத் தலை கொண்ட அரிய வகை ஆமைக்குஞ்சு!f

SOORIYAN GOSSIP - அமெரிக்காவில் இரட்டைத் தலை கொண்ட அரிய வகை ஆமைக்குஞ்சு!fSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22 Views

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள கேப் கோட் பகுதியில், அரிய வகையைச் சேர்ந்த இரண்டு தலைகளைக் கொண்ட ஆமைக்குஞ்சு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெறும் 5.2 கிராம் எடை கொண்ட இந்த ஆமைக்குஞ்சு, வெல்ப்ளீட் பகுதியில் பாதுகாக்கப்பட்ட ஆமை முட்டையிடும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

Diamondback Terrapin எனப்படும் இந்த ஆமைக்குஞ்சு, பின்னர் Cape Wildlife Center-க்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் இரண்டு தலைகளும் ஒரே உடலுடன் இணைந்திருப்பதற்கு Bicephaly எனப்படும் மிகவும் அரிய வளர்ச்சிக் குறைபாடே காரணம் என வனவிலங்கு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கருவின் ஆரம்ப வளர்ச்சியின்போது இரட்டைக் கருக்கள் முழுமையாகப் பிரியாமல் இருப்பதால் இத்தகைய நிலை ஏற்படலாம்.

தற்போது இரு தலைகளும் இயல்பாக செயல்படுவதாகவும், இரு பக்கங்களும் நன்றாக இருப்பதாகவும் கால்நடை மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. ஆமைக்குஞ்சின் உணவு உட்கொள்ளுதல், வளர்ச்சி மற்றும் நடத்தை ஆகியவற்றை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுபோன்ற இரண்டு சம்பவங்களை மட்டுமே தங்கள் மையம் சந்தித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், மாசசூசெட்ஸ் மாநிலத்தில் Diamondback Terrapin' ஆமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளான இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளதால், இந்த அரிய கண்டுபிடிப்பு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு Barnstable பகுதியில் இரண்டு தலைகள் மற்றும் ஆறு கால்களுடன் மற்றொரு ஆமைக்குஞ்சு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top