தேவையான பொருட்கள்:
கோதுமை மா – 4 மேசைக்கரண்டி
கொக்கோ பவுடர் – 1½ மேசைக்கரண்டி
சீனி – 2 மேசைக்கரண்டி
Baking powder – ¼ தேக்கரண்டி
பால் – 3 மேசைக்கரண்டி
எண்ணெய் அல்லது உருக்கிய வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
Vanilla essence – சில துளிகள்
Chocolate chips – தேவையான அளவு
செய்முறை:
ஒரு Microwave-safe mugஇல் கோதுமை மா , கொக்கோ பவுடர், சீனி மற்றும் baking powder சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் பால், எண்ணெய் மற்றும் vanilla essence சேர்த்து கட்டிகள் இல்லாமல் அதன் பதம் வரும் வரை நன்கு கலக்கவும். பின்னர் அதன் மேலே chocolate chips தூவிக்கொள்ளலாம்.
அதை microwaveஇல் high powerஇல் சுமார் 60–90 விநாடிகள் வைத்து வேகவைக்கவும். பின்னர் 1 நிமிடம் ஆறவிட்டு பரிமாறலாம் .