Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
2030 இற்குள் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தால் மனித குலமே அழியும்!

SOORIYAN GOSSIP - 2030 இற்குள் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தால் மனித குலமே அழியும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views

2030இற்குள்  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மனித குலமே அழியும் என்று பரவி வரும் அச்சங்கள் மற்றும் வாதங்கள் குறித்து NVIDIA நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் தனது விளக்கங்களை அளித்துள்ளார்.

CBS News உடனான நேர்காணலில் பேசிய அவர், 2030 இற்குள் செயற்கை நுண்ணறிவு காரணமாக மனிதகுலம் அழியும் என்ற கூற்றில் எந்தவிதமான சாத்தியமும் இல்லை என்றும், அத்தகைய வாதங்கள் அர்த்தமற்றவை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு குறித்து சிலர் விடுத்து வரும் தீவிர எச்சரிக்கைகளுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள், வணிக நலன்கள் அல்லது பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கம் இருக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

​தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்று ஹுவாங் அழைப்பு விடுத்துள்ளார்.

அதேசமயம், பாதுகாப்பின் அடிப்படையில் நிறுவனங்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியதுடன், முழுமையாகத் தயாராகாத மற்றும் பாதுகாப்பற்ற செயற்கை நுண்ணறிவு வகைகளை சந்தைக்குக் கொண்டுவருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

​முன்னதாக, Anthropic நிறுவனத்தின் ஆய்வாளர் ஜேக்கப் கோக்சோன் போன்றோர் செயற்கை நுண்ணறிவு ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், ஜென்சன் ஹுவாங்கின் இந்தக் கருத்துகள் தொழில்நுட்ப உலகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top