எள்ளில் அதிகளவு கல்சியம் மற்றும் பொஸ்பரஸ் காணப்படுவதால் எலும்புகள் வலுவாக இருக்க உதவுகிறது. அதேவேளை எலும்பின் அடர்த்தியை பாதுகாக்க உதவி செய்கிறது.
எள்ளில் காணப்படும் மக்னிசியம் மற்றும் நல்ல கொழுப்புக்கள் தசைகள் மற்றும் எலும்புகளின் செயற்பாட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது.
எள்ளில் காணப்படும் இரும்புச்சத்து இரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு தேவையான ஒட்சிசனை சீராக வழங்குகின்றது.
வாரத்தில் 3 முறையாவது எள்ளை உணவில் சேர்ப்பதால் உடல் வலிமை பெறுகிறது. மாதவிடாய் காலங்களிலும் அதற்குப் பிறகும் பெண்களின் ஹோர்மோன் ஏற்றத்தாழ்வுகளைச் சீரமைக்க எள் உதவுகிறது.