26 Views
மேலும், தூங்குவதற்கு முன்பு மது அருந்துவதைத் தவிர்ப்பதும், மூக்கடைப்பு அல்லது ஒவ்வாமை இருந்தால் அதற்குரிய சிகிச்சையைப் பெறுவதும் பயனுள்ளதாக இருக்கலாம். முறையான தூக்கப் பழக்கத்தையும் கடைப்பிடிப்பது முக்கியம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், குறட்டையுடன் தூக்கத்தில் மூச்சு தடைபடுதல், மூச்சுத்திணறல் அல்லது பகல் நேரத்தில் அதிக தூக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தக் கூடாது. இவை தூக்கத்தில் மூச்சுத்தடை ஏற்படும் ‘ஸ்லீப் அப்ப்னியா’ பிரச்சினையின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பதால், மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.