42 Views
மேலும், குளிர்ந்த நீரால் வாயைக் கொப்பளித்தல், சிறிய அளவில் சர்க்கரையை வாயில் வைத்து மெதுவாக விழுங்குதல் போன்ற முறைகளும் சிலருக்கு நிவாரணம் அளிக்கலாம். அதிகமாக உணவு உட்கொள்வது, குளிர்பானங்களை அருந்துவது போன்றவை விக்கலைத் தூண்டக்கூடும் என்பதால், அவற்றைத் தவிர்த்து சிறிய அளவிலான உணவை எடுத்துக்கொள்வதும் உதவியாக இருக்கலாம்.
ஆனால் விக்கல் 48 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தாலோ, உணவு உட்கொள்வது, தூங்குவது அல்லது சுவாசிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தினாலோ மருத்துவரை அணுகுவது அவசியம். குறிப்பாக நெஞ்சுவலி அல்லது மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகளுடன் விக்கல் ஏற்பட்டால் மருத்துவ உதவியை தாமதிக்காமல் பெற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.