39 Views
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘மகுடம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், பின்னர் திரைப்படத்தின் இயக்கப் பொறுப்பை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்டார். மேலும், விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி, திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இத்திரைப்படத்தில் விஷால் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இயக்குநராகும் தனது 30 ஆண்டுகால கனவு திரைப்படத்தின் மூலம் நிறைவேறியதாக விஷால் கூறியிருந்தார்.
இந்நிலையில், ‘மகுடம்’ திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது. திரைப்படம் இம்மாதம் 14ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.