Bollywood இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் ஸ்ரீ ராமனாக நடித்து வரும் திரைப்படம் தான் ராமாயணம். இந்திய திரையுலகிலேயே இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்னதாகவே இத்திரைப்படத்தின் First Look மற்றும் Teasar ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ Trailer வெளியீட்டு திகதியை படக்குழு அறிவித்துள்ளது.
அடுத்த சில தினங்களில் அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் புகழ்பெற்ற 'காமிக்-கான் 2026' திருவிழா நடைபெற உள்ளது. இதில் July 23ஆம் திகதியன்று இத்திரைப்படத்தின் first look சர்வதேச அளவில் திரையிடப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, July 24ஆம் திகதி 'ராமாயணம்' திரைப்படத்தின் Trailer உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த காவியத் திரைப்படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து, சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக கன்னட நடிகர் யஷும் நடிக்கின்றனர். மேலும், அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும், லட்சுமணனாக ரவி துபேயும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்களாக AR ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இணைந்து இசையமைக்கின்றனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'ராமாயணம் பாகம் 1 இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.