Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
சலவை இயந்திரத்தை பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்

SOORIYAN GOSSIP - சலவை இயந்திரத்தை பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views
சலவை இயந்திரம் துணி துவைக்கும் வேலையை எளிதாக்கினாலும், அதைப் பயன்படுத்தும்போது செய்யும் சில தவறுகள் துணிகளையும், இயந்திரத்தையும் பாதிக்கக்கூடும்.

முதலில், இயந்திரத்தில் அளவுக்கு அதிகமாக துணிகளை திணிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான துணிகள் டிரம்மில் சீராகச் சுழல முடியாததால், துணிகள் முழுமையாக சுத்தமாகாமல் போகலாம்.

அதேபோல், தேவைக்கு அதிகமாக சலவை தூள் பயன்படுத்துவதும் தவறு. அதிக சவர்கார நுரை துணிகளில் படிவதுடன், சலவை இயந்திரத்தில் அழுக்கு தேங்க வாய்ப்புள்ளது.

வெள்ளை, கறுப்பு மற்றும் ஏனைய நிற துணிகளை ஒன்றாக துவைக்காமல், நிறம் மற்றும் துணியின் தன்மைக்கு ஏற்ப தனித்தனியாகப் பிரித்து துவைப்பது நல்லது. மேலும், இயந்திரத்தில் துணிகளைப் போடுவதற்கு முன்பு சட்டைப் பைகளில் பணம், சாவி, கடதாசி போன்ற பொருட்கள் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

ஈரமான துணிகளை நீண்ட நேரம் இயந்திரத்துக்குள் வைத்திருக்கக் கூடாது. இதனால் துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகலாம். துணியின் தன்மைக்கு ஏற்ப சரியான Wash mode மற்றும் வெப்பநிலையைத் தேர்வு செய்வதும் அவசியம்.

இறுதியாக, துணிகளை மட்டும் சுத்தமாக வைத்தால் போதாது. சலவை இயந்திரத்தையும் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். சலவை தூள், அழுக்கு மற்றும் ஈரப்பதம் தேங்கினால் துர்நாற்றம் மற்றும் செயல்திறன் குறைபாடு ஏற்படலாம்.

எனவே, இந்தச் சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவது துணிகளின் தரத்தையும், சலவை இயந்திரத்தின் ஆயுளையும் பாதுகாக்க உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top