26 Views
முன்னதாக இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 503 ஓட்டங்களை குவித்து போட்டியை இடைநிறுத்தியது. அதற்கு பதிலளித்த இலங்கை அணி 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததால், இந்திய அணி 213 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் ‘Follow-on’ வழங்கி இலங்கை அணியை மீண்டும் துடுப்பெடுத்தாடச் செய்தார்.
2 ஆவது இன்னிங்சில் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலுக்கு மத்தியில் இலங்கை அணி ஆரம்ப விக்கெட்டுகளை இழந்தது. மதிய இடைவேளையில் பசிந்து சூரியபண்டார 35 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 10 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியாவை மீண்டும் துடுப்பெடுக்கச் செய்ய இலங்கை அணி இன்னும் 130 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில், போட்டியில் இந்திய அணிக்கே சாதகமான நிலை காணப்படுகிறது.