26 Views
அதேநேரம் T20 உலகக்கிண்ண போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே மாற்ற வேண்டும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் (ICC) வலியுறுத்தியது.
எனினும், அந்த கோரிக்கை நிராகரிக்கபட்டு இரு நாட்டு கிரிக்கெட் சபைகளுக்கிடையே கருத்து முரண்பாடு காணப்பட்டது, அதைத்தொடர்ந்து தற்போது இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளிடையே விரிசல் சீரடைந்து வரும்நிலையில்,இந்த ஆண்டின் இறுதியில் பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையில், செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் இந்தியாவுக்கு எதிரான T20 தொடரில் விளையாட ஆப்கானிஸ்தானும் திட்டமிட்டுள்ளது.இந்த தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அதே நேரத்தில் இந்தியா பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால், ஆப்கானிஸ்தான் தொடரின் அட்டவணையில் மாற்றம் அல்லது ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .