32 Views
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முக்கியமான போட்டியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் 0–0 என சமநிலையில் முடித்தன.அரையிறுதிக்கு முன்னேற இந்தியாவுக்கு வெற்றி கட்டாயமாக இருந்த நிலையில், அவுஸ்திரேலியா சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் கோல் முயற்சிகளை முறியடித்தது. இதனால் போட்டி முழுவதும் பரபரப்பாகவே இருந்தது.
இரு அணிகளும் புள்ளிகளில் சமநிலையில் இருந்தபோதிலும், அதிக கோல்கள் அடித்திருந்த அவுஸ்திரேலியா அரையிறுதிக்கான வாய்ப்பை தட்டிச் சென்றது. இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கிய இந்தியா அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததோடு நெதர்லாந்து,அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. மேலும் இந்திய அணி தொடரில் 5 ஆவது இடத்துக்கான போட்டியில் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது .