42 Views
சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கிண்ண அணியில் இடம்பிடிப்பதே தற்போது தனது முக்கிய இலக்கு என்றும், அதற்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருப்பதாகவும் மில்லர் கூறியுள்ளார். எனினும், அணியில் தனது இடம் உறுதி செய்யப்படவில்லை என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
37 வயதான மில்லர் இதுவரை 178 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 சதங்கள் மற்றும் 24 அரைச்சதங்களுடன் 4,611 ஓட்டங்களைக் குவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணி இதுவரை 50 ஓவர் உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறாத நிலையில், 2027ஆம் ஆண்டு அந்த வரலாற்றை மாற்றி கிண்ணத்தினை வெல்வதே தனது கனவு என அவர் தெரிவித்துள்ளார்.