ரோபோ உடைகளுக்காக கம்பி வடிவிலான புதிய மோட்டாரை சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 1 முதல் 3 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட இந்த மோட்டார், வழக்கமான மோட்டார்களைப் போல பெரியதாகவும் கனமாகவும் இல்லாமல் மிகவும் நெகிழ்வானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘FiberMotor’ எனப்படும் இந்த தொழில்நுட்பத்தை ஆடைகளில் நூல் போன்று இணைக்க முடியும். இதன் மூலம் மனிதர்களின் கை, கால் இயக்கங்களுக்கு உதவும் ரோபோ உடைகள் மற்றும் Exoskeleton களை உருவாக்குவதில் பயன்படுத்தலாம். எதிர்காலத்தில் நடப்பதற்கு உதவும் அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் செயற்கை உறுப்புகளிலும் இதைப் பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.