முன்னாள் இந்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஸ்ரீகாந்த், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு புவனேஷ்வர் குமார் இந்திய T20 அணிக்குத் திரும்பியதை பாராட்டியுள்ளார் .
நியூசிலாந்தின் சூழ்நிலைகள், அனுபவமிக்க அந்த வேகப்பந்து வீச்சாளர் அணியில் தனது இடத்தை மீண்டும் பெறுவதற்கு உகந்த சூழலை வழங்குகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இந்திய அணியில் அனுபவமிக்க புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.