2026 ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான T20 கிரிக்கெட் ஆட்டத்தில் நேபாள அணி, ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நேபாளத்தின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 102 ஓட்டங்களை பெற்றது .
போராடிய நேபாள அணி 17.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.