Meta நிறுவனம் Camera இல்லாமல் செயல்படும் புதிய Ray-Ban Meta Audio ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இசை மற்றும் Podcast கேட்பது, தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட Audio சார்ந்த வசதிகளுடன் இந்தக் கண்ணாடி இயங்கும். மேலும், மெட்டாவின் Meta AI உதவியாளரையும் குரல் மூலம் பயன்படுத்த முடியும்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அக்டோபர் 13 முதல் இந்தக் கண்ணாடி விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.