Facebook பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை முறையாகப் பாதுகாக்கத் தவறியதாகக் கூறி, Meta நிறுவனத்திற்கு 25 பில்லியன் டொலர் அபராதம் விதித்து நியூ மெக்சிகோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம், சுமார் 8.7 கோடி Facebook பயனர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சேகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது. பயனர்களின் தரவுப் பாதுகாப்பு தொடர்பாக Meta நிறுவனம் தவறான தகவல்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகை நியூ மெக்சிகோ மாநிலத்தின் பாடசாலைகள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.