‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார். பிரபல மலையாள நடிகையும் ‘கொட்டுக்காளி’ தமிழ் திரைப்படத்தில் நடித்தவருமான 'அன்னா பென்' நாயகியாக நடிக்க, கே.எஸ். ரவிகுமார், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், சித்தப்பு சரவணன், விநோதினி வைத்தியநாதன், லொள்ளு சபா மனோகரன், மோனிஷா பிளஸ்ஸி, வாட்ஸப் மணி, நக்கலைட்ஸ் ரஞ்சித் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
திரைப்படத்தின் First look போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்டார். ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த நிலையில், காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.