பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் முத்தரப்புத் தொடரின் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தோல்வி தொடர்பாக பேசிய பங்களாதேஷ் அணியின் அணித்தலைவர் ரஹ்மத் ஷா இவ்வாறு கூறியுள்ளார்." நாங்கள் ஒவ்வொரு நாளும் அதே தவறைத் தொடர்ந்து செய்து வருகிறோம். துடுப்பாட்ட அணியாக மீண்டும் தவறு செய்துவிட்டோம்.தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தோம். அதுதான் முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன்."எனக் குறிப்பிட்டுள்ளார்.