வாழைக்காயில் உள்ள மா சத்து இரத்த செல்களில் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைத்து, இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.வாழைக்காயில் காணப்படும் நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வீக்கம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
வாழைக்காயில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால், இரத்த அழுத்தத்தைக் சீராக வைக்க உதவுகிறது. கொழுப்பு குறைவாக இருப்பதால், பசியைக் கட்டுப்படுத்தி எடையைக் சீராக வைக்கவும் வாழைக்காய் உதவுகிறது.
வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமில சுரப்பைக் கட்டுப்படுத்தி, வயிற்றுப் புண்களை ஆற்ற வாழைக்காய் உதவுகிறது. தொடர்ந்து வாழைக்காய் சாப்பிட்டு வருவது சிறுநீரகத்தின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது.
வாழைக்காயில் காணப்படும் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் எலும்புகளை பலப்படுத்தவும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.