மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக்கொள்ளவும், வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று மட்டுமே பயன்படும் என்று நாம் அனைவரும் நினைப்பதுண்டு.
வயிற்றில் பூச்சி தொல்லை அதிகமாக காணப்படும் வேளைகளில் மல்லிகைப்பூவை நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வர வயிற்றில் காணப்படும் புழுக்கள் அழிவடையும். தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்து வர தலைவலி காணாமல் போகும்.
மல்லிகைப் பூக்களை நிழலில் காயவைத்து அவை நன்று உலர்ந்ததும் அவற்றை அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடும் பொழுது மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் குறைவடையும் இது போன்ற பல மகத்துவங்களைக் மல்லிகைபூ கொண்டுள்ளது.