42 Views
அவுஸ்ரேலியா அணிக்குள் பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது இரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. சமீபத்தில் ஜிம்பாப்வே அணியை 3-0 என வீழ்த்திய நிலையில், அதே வேகம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் தொடருமா என்பதே தற்போது எதிர்பார்ப்பாக மாறியுள்ளது .
ஆனால் சொந்த மண்ணில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு பந்துவீச்சில் ரபாடா, லுங்கி என்கிடி, ஒட்னியல் பார்ட்மேன் உள்ளிட்ட முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக இல்லாததால், புதிய வீரர்களுக்கு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் இன்று கிங்ஸ்மீட்டில் அவுஸ்ரேலியாவின் அதிரடி துடுப்பாட்டமா அல்லது தென் ஆப்பிரிக்காவின் சொந்த மண் பலமா என்பதுதான் இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .