இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ஓட்டங்களை எட்டியதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின்போது இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.
வேகமாக 23,000 சர்வதேச ஓட்டங்களை 521 இன்னிங்ஸ்களில் பெற்றதன் மூலம், இந்த சாதனையை நிகழ்த்திய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். சச்சின் 522 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியிருந்தார்.
இதன் மூலம் 23,000 சர்வதேச ஓட்டங்களை கடந்த எட்டாவது வீரராகவும், இங்கிலாந்தின் முதல் வீரராகவும் ஜோ ரூட் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் விராட் கோலி 490 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டி முதலிடத்தில் உள்ளார்.