சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
இதில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் நிலையில் இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் சதம் கடந்துள்ளார்.
மூன்று போட்டிகளைக்கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணி படுதோல்வி அடைந்தது. இன்று இடம்பெறும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் தொடரை சமப்படுத்தலாம் என்ற முனைப்புடன் விளையாடி வருகிறது.
இந்நிலையில், இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸின் இந்த சதம் இலங்கை அணிக்கு வலு சேர்த்துள்ளது.