சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில், பாலிவுட் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் மட்டுமே வரும் இவரது கதாபாத்திரத்திற்காக, இந்திய மதிப்பில் ரூ. 25 கோடி வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1986 ஆம் ஆண்டு வெளியான 'பகவான் தாதா' இந்தித் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஹிருத்திக் ரோஷன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் 'ஜெயிலர் 2' மூலம் இணைந்துள்ளதால் இத்திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'ஜெயிலர் 2' திரைப்படம் உலகளவில் 5 நாட்களிலேயே இந்திய மதிப்பில் சுமார் ரூ.477 கோடியை வசூலித்து சாதனை படைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.