வீடுகளில் மின்சார Switch ஐ அணைத்த பிறகும் (LED) மின்குமிழ் மங்கலாக ஒளிர்வதைப் பலர் கவனித்திருக்கலாம். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், இதற்குப் பின்னால் சில மின்சாரக் காரணங்கள் உள்ளன.
இதற்கு முக்கியக் காரணம், Switch அணைக்கப்பட்ட நிலையிலும் மின்குமிழுக்கு சிறிய அளவில் மின்சாரம் செல்வதாகும். Switch இல் உள்ள Indicator விளக்கு, Electronic timer அல்லது மின்சார வயர்களில் ஏற்படும் மின்னழுத்தத் தாக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு தொடர்ந்து ஒளிர்ந்தாலோ, அடிக்கடி மினுக்கினாலோ, மின்சுற்று மற்றும் Switch ஐ தகுதியான மின்சாரப் பணியாளரிடம் பரிசோதிப்பது அவசியம்.