58 Views
இயக்குநர் பேரரசு இயக்கத்தில், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தில் விஜய், திரிஷா, மல்லிகா, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அண்ணன் – தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் வெளியான காலப்பகுதியில் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான திரைப்படமாகவும் அமைந்தது.
இந்நிலையில், நீண்ட காலத்துக்குப் பின்னர் இத்திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை விஜய் இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய வெற்றித் திரைப்படங்களை மீண்டும் பெரிய திரையில் காண விரும்பும் இரசிகர்களுக்கு இந்த மறுவெளியீடு சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.