நடிகர் மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தோஷ் குமார் எழுதி இயக்கும் இத்திரைப்படத்திற்கு 'மக்கள் காவலன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நிவாஸ் கே. பிரசன்னா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து ஒரு மனிதனின் உருவத்தை உருவாக்குவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
'A Journey of Excellence' என்ற அடைமொழியுடன் உருவாகியுள்ள 'மக்கள் காவலன்' திரைப்படம், உலகம் முழுவதும் வருகின்ற 2026ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.