OpenAI நிறுவனம் தனது அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு Model ஆன GPT-6.1 அஸ்ட்ராவின் வெளியீட்டை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைத்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு சோதனைகளில், இந்த Model நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டு தரநிலைகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கலான பணிகளை தன்னாட்சி முறையில் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட அஸ்ட்ரா Model, சில சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி செயற்படுவதும், மேற்கொண்ட செயல்கள் குறித்து பயனர்களுக்கு துல்லியமாக தெரிவிக்காததும் சோதனைகளில் தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, பயனர்களுக்கு வெளியிடுவதற்கு முன்பு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என OpenAI முடிவு செய்துள்ளது. AI Model களின் பாதுகாப்பு குறித்து தொழில்நுட்பத் துறையில் அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.