2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான கிரிக்கெட் பிரிவில், அரையிறுதியில் இந்தியாவுடன் இலங்கை மோதுகிறது.
ஜப்பானின் நிஷின் நகரில் இன்று நடைபெறவிருந்த காலிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் நேபாளம் அணிகள் மோத இருந்த நிலையில், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி இரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, தரவரிசை அடிப்படையில் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.ஒக்டோபர் 1-ம் திகதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.