பாதங்களில் காணப்படும் வெடிப்புகள் நீங்க விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவில் எடுத்து சிறிது மஞ்சள் சேர்த்து நன்கு குழைத்து பாதங்களில் வெடிப்பு காணப்படும் இடங்களில் தடவ வேண்டும்.
நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து பாத வெடிப்புகளில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து கழுவி வர பாத வெடிப்பு குறைவடையும்.
இரவில் கால்களைக் கழுவிய பின், தூய்மையான கற்றாழை சாற்றை பாத வெடிப்புகள் காணப்படும் இடங்களில் தடவி மசாஜ் செய்யவும். இதில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எரிச்சலைக் குறைக்கும்.
பாதங்களுக்கு ரசாயனங்கள் அதிகமுள்ள கடினமான சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. மென்மையான அல்லது கிளிசரின் சோப்புகளைப் பயன்படுத்தலாம்.
மருதாணி இலைகளை நன்கு அரைத்து பாத வெடிப்பு காணப்படும் இடங்களில் தடவி வர பாத வெடிப்பு குறைவடையும்.