தொலைபேசியை Charge செய்யும்போது சில பழக்கங்கள் Battery இல் அதிக வெப்பத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, பின்னணியில் தேவையற்ற செயலிகளை இயக்குவது, Wi-Fi, Bluetooth, GPS மற்றும் Mobile Data வை தொடர்ந்து பயன்படுத்துவது Charging நேரத்தில் தொலைபேசியின் செயற்பாட்டை அதிகரிக்கலாம்.
மேலும், தடிமனான தொலைபேசி உறையை அகற்றாமல் Charge செய்வதும் வெப்பம் வெளியேறுவதைக் குறைக்கக்கூடும். அதேபோல், Charge செய்யும் நேரத்தில் Games விளையாடுவது அல்லது அதிகமாக தொலைபேசியை பயன்படுத்துவது Battery இன் வெப்பத்தை மேலும் அதிகரிக்கலாம். எனவே, Charge செய்யும்போது தொலைபேசியை அதிகமாக பயன்படுத்தாமல், அதிக வெப்பம் ஏற்படாத வகையில் கவனமாக இருப்பது பாதுகாப்பானது.