தோல்ப் புற்றுநோய் ஏற்படுவதை முழுமையாகத் தடுக்க முடியாவிட்டாலும், சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களில்(UV) இருந்து பாதுகாப்பாக இருப்பதன் மூலம் அதன் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
● கடுமையான வெயில் நேரத்தில், குறிப்பாகக் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும்.
● வெயில் நேரத்தில் வெளியில் செல்வதற்கு முன் சன்ஸ்கிரீன் உபயோகிப்பதோடு, நீண்ட நேரம் வெளியில் இருந்தால் மீண்டும் பூச வேண்டும்.
● வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்யும் போது நீளமான ஆடைகள், அகலமான தொப்பி மற்றும் UV பாதுகாப்புள்ள கண்ணாடிகளைப் பயன்படுத்தல்.
● செயற்கை UV கதிர்வீச்சில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
● உடலில் நீண்ட நாட்களாக ஆறாமல் நீடிக்கும் புண் எவையேனும் இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்.
● தோலில் சந்தேகத்திற்கிடமான மாற்றம் தென்பட்டால், தானாக சிகிச்சை செய்வதைவிட தோல் மருத்துவரிடம் பரிசோதனை செய்வது பாதுகாப்பானதாகும்.