தமிழகத்தின் நெல்லையில் நடிகை த்ரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பேரவையின் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான தச்சநல்லூர் தொழிலதிபர் ராஜகோபால் இதனை ஆரம்பித்துவைத்து பேரவையின் சின்னத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்த அமைப்பின் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், சட்ட உதவிகள் உள்ளிட்ட சமூகப் பணிகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த்ரிஷா வணக்கம் செலுத்தும் படத்துடன், ‘பதவிக்காக அல்ல! தமிழக மக்களின் உரிமைக்காக!’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள அந்த இலச்சினை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.