பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பெதும் நிஸ்ஸங்க விலகியுள்ளார்.
பெதும் நிஸ்ஸங்கவின் இடது காலின் தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என இலங்கை கிரிக்கெட் நேற்று (26) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குசல் மெண்டிஸ் புதிய டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் எதிர்கொள்ளும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் நவம்பர் 09 ஆம் திகதி ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.