33 Views
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் தேநீர் , பியர், வைன் , கேக் மற்றும் தோடம் பழம் உள்ளிட்ட ஐந்து வகையான வாசனைகளை அடையாளம் கண்டு மீண்டும் உருவாக்கும் திறன் பரிசோதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் காணொளி அழைப்புகளின்போது வாசனைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், மெய்நிகர் யதார்த்த அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், இணையவழி வர்த்தகத்தில் பொருட்களை வாங்குவதற்கு முன்பே அவற்றின் வாசனையை அனுபவிப்பதற்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்தத் தொழில்நுட்பம் தற்போது ஆய்வுநிலையிலேயே உள்ளதுடன், பல்வேறு வாசனைகளைத் துல்லியமாக உருவாக்குதல் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்துதல் போன்ற சவால்கள் தொடர்கின்றன. எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியடைந்தால், இணையத் தொடர்பாடலில் புதிய அனுபவத்தை உருவாக்குவதுடன், டிஜிட்டல் உலகில் வாசனைகளையும் பகிர்ந்துகொள்ளும் புதிய யுகத்திற்கு வழிவகுக்கலாம் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.