கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பையில் பிரபல ஹிந்தி நடிகர் டைகர் ஷெரோஃப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக நடிகர் டைகர் ஷெரோஃப் உயிர் தப்பினார்.
இந்தத் தாக்குதல் குறித்துத் தீவிரமாக விசாரணை செய்த காவல்துறையினர் இதுவரை 10 பேரைக் கைது செய்துள்ளனர். இவர்களில் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் பூல் சிங் என்பவரைக் கைது செய்து விசாரித்த போது அவர் கூறிய காரணம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
1998ஆம் ஆண்டு ஜோத்பூர் மக்களின் புனித விலங்காகக் கருதப்படும் சிங்கார மானை வேட்டையாடிய வழக்கில் சிக்கிய சல்மான் கான் அதற்கு மன்னிப்புக் கேட்கவில்லை என்றும், அவரை ஆதரிப்போரை நாங்கள் எதிர்ப்போம் என்றும், அதனாலேயே டைகர் ஷெரோஃபைத் தாக்கினோம் என்றும் குறித்த கைதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு டைகர் செரோஃப் நடித்த 'ஹீரோபந்தி 2' திரைப்படத்தின் விளம்பர நிகழ்வொன்றின் போது "ஹிந்தி திரையுலகில் ஒரே ஒரு புலிதான், அது சல்மான் கான் மட்டுமே, அவரின் முன் நான் ஒரு பூனைதான்" எனக் கூறி சல்மான் கானை டைகர் ஷெரோஃப் புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.