மாயாஜால உலகம், பேசும் விலங்குகள், வீரதீரச் செயல்கள் போன்றவற்றை மையமாகக் கொண்ட புகழ்பெற்ற கற்பனைத் திரைப்படத் தொடர்தான் 'நார்னியா'.
2005, 2008 மற்றும் 2010களில் வெளியான 'நார்னியா' திரைப்படப் பாகங்கள் அனைத்தும் இரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. 90s Kidsகளின் அபிமான Fantasy திரைப்படத் தொடரான நார்னியாவின் அடுத்த பாகம் தற்போது உருவாகியுள்ளது.
'Narnia: The Magician's Nephew' என்ற பெயரில் உருவாகியுள்ள 'நார்னியா' திரைப்படத் தொடரின் 4ஆவது பாகத்தின் Trailer வெளியாகியுள்ளது. பல்வேறு மாயாஜாலக் காட்சிகளைக் கொண்ட இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வெளியாகவுள்ளது.